கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அணு உலைக் கழிவு மேலாண்மை ஆணையம், 2013 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாகவும், கூடங்குளம் பகுதியில் அணுக் கழிவுகளை சேமிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேமித்து வைக்கும் அணுக் கழிவுகள், நாளாக நாளாக வீரியம் குறைந்துவிடும் என சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளம் அணு ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே குறிப்பிட்ட அளவில் தான் அணுக் கதிர்வீச்சு உள்ளது என்றும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version