நாட்டின் உள்கட்டமைப்பை ரூ.102 லட்சம் கோடி மதிப்பில் மேம்படுத்த திட்டம்: மத்திய அமைச்சர்

அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரித்துள்ளார்.

டெல்லியில், உள்கட்டமைப்பு மேம்படுவத்துவதற்கான திட்டங்களை வகுக்க செயலாக்க குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020ஆம் ஆண்டின் பிற்பாதியில் உலக முதலீடுகள் ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், இவற்றில் 16 லட்சம் கோடி ரூபாய் கிராமப்புற உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் நீர் பாசன திட்டத்திற்கு செலவிடப்படும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து

பேசிய அவர், உள்கட்டமைப்பு மேம்படுத்துவது குறித்து 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version