ரூ.2.35 இலட்சம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவை – பரபரக்கவைக்கும் 11 மணி !

இன்று காலை 11.00 மணிக்கு கூடுகிறது 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – 2.35 லட்சம் கோடி இழப்பீடு வழங்க முடியுமா ? முடியாதா ? என மத்திய நிதி அமைச்சகம் இன்று மாநிலங்களிடம் அறிவிக்கும்.

இந்தியாவில் நேர்முக வரி / மறைமுக வரி என இரண்டு முறைகளில் வரிகள் வசூலிக்கப்படுகிறது. இதில் மறைமுக வரியில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பினை மத்திய அரசு வழங்கி கொண்டு உள்ளது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.

ஏன் இவ்வளவு கால தாமதம் என மாநில அரசுகள் கேள்வி எழுப்ப, கொரோனா பொது முடக்க காலத்தில் மத்திய அரசிடம் போதிய நிதி இல்லை என மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த மாநிலங்கள் ஏற்கனவே மாநில பேரிடர் நிதியில் இருந்து அதிகம் செலவு செய்து விட்டோம், இனிமேல் மாநிலங்களிடமும் செலவு செய்ய போதிய நிதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து.

கடந்த முறை நடைபெற்ற 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து சிறப்பு கடன் நிதி அல்லது வெளி கடன்களை பெற்று கொள்ளலாம் அந்த கடன்களை கால வரம்புகள் இன்றி மதுபானம் / ஆடம்பரபொருட்களின் வரியை உயர்த்தி லாபம் பெற்று மீண்டும் செலுத்தலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது;

இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள ஒரு சில மாநிலங்களும் இழப்பீடு தொகையை மத்திய அரசே ஏற்பாடு செய்து தரட்டும் என தெரிவித்தனர். ஆனால் மத்திய நிதி அமைச்சகமோ ஜி.எஸ்.டி விதியின் படி நாங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது, ஆனால் அரசியல் சாசன சட்ட விதிகளிடன் படி மாநில அரசின் இழப்பீடு தொகையை மத்திய அரசே ஏற்பாடு செய்து தர வேண்டும் என மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்தது.

இந்நிலையில் தான் இன்று 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 11 மணிக்கு வீடியோ காண்பிரன்ஸ் மூலம் கூடுகிறது. கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பீடு நிதியை மத்திய நிதி அமைச்சகம் வழங்குவது குறித்து மாநிலங்களுக்கு தெரிவிக்கப்படும் என அமைச்சக வட்டடாரங்கள் தெரிவிக்கின்றது.

 

 

 

 

Exit mobile version