நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே, காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிப்பதால், அவ்வழியாக கவனமுடன் வாகனத்தை இயக்குமாறு வாகன ஓட்டிகளை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவைக்கு செல்லும் மலைப் பாதையில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுயானைகள் சுற்றித் திரிகின்றன. கோவையில் இருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப் பேருந்தை பெரும்பள்ளம் என்ற இடத்தில் காட்டுயானை ஒன்று வழிமறித்தது. இதை கண்டவுடன் ஒட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
இதேபோல், அவ்வப்போது காட்டுயானைகள் வாகனங்களை வழிமறிப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை இயக்கவேண்டுமெனவும், யானைகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.