சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னையில் சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும்,  மாலை நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாசாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி,  சைதாப்பேட்டை , வேளச்சேரி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கிறது. மிதமான மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version