பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

குன்றத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் , மர்ம நபர்கள் 2 பேர் பட்டாக்கத்தியை காட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மதானந்தபுரம் பகுதியில், இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சிகரெட் பிடித்து கொண்டிருந்த இளைஞரை, பட்டாகத்தி காட்டி மிரட்டினர். விலை உயர்ந்த செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்த கொள்ளையர்கள், உடனடியாக அவ்விடத்தை விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்த காவல்துறையினர், சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version