ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எனது மகள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்கிறார்கள், நான் பனங்காட்டு நரி, மிசாவை பார்த்தவன் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என பிரசாரத்தில் ஏக வசனமாக பேசி கைதட்டல்களை வாங்கிக் கொண்டார் ஸ்டாலின். வருமான வரித்துறையினரை முடிந்தால் எனது வீட்டிற்கு வர சொல்லுங்கள் என கொக்கரித்தார் உதயநிதி
ஆனால் ஸ்டாலினும், உதயநிதியும் செந்தாமரையின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார்களே தவிர சபரீசன் என்ற பெயரை மறந்து விட்டார்கள். இல்லை இல்லை மறைத்து விட்டார்கள். யார் இந்த சபரீசன்? ஸ்டாலினின் மருமகனான இவரது வீட்டில் தான் திமுகவுக்கு தேர்தல் யுக்திகளை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக திமுகவுக்காக திரைமறைவில் ஒரு புரோக்கராக பணியாற்றி வரும் சபரீசன், யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை சீட் தர வேண்டும் உள்ளிட்ட பேரங்களை முன்னின்று நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சென்ற போது அவரது மிக பிரம்மாண்ட வீடு வெளியுலகிற்கு தெரியவந்தது. ஏதோ 5 நட்சத்திர சொகுசு விடுதி போல காட்சியளித்த அவரது வீட்டைக் கண்ட வருமானவரித்துறையினரே வாயடைத்துப் போயினர். பளபளக்கும் கிரானைட்டுகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளக்குகள், விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்ட அலங்காரப் பொருட்கள் என மாளிகை போல அவரது வீடு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல அடுக்குகள் கொண்ட வீட்டில் ஒவ்வொரு அடுக்கையும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து கட்டியுள்ளார். அது மட்டுமல்ல 6 பன்னாட்டு நிறுவனங்கள் சபரீசனின் பெயரிலும் 12 பன்னாட்டு நிறுவனங்கள் சபரீசனின் சகோதரர் பிரவின் கணேஷ் என்பவர் பெயரிலும் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது
சபரீசன் வீட்டில் இருந்து தான் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எப்படியோ மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர் சபரீசன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். சபரீசன் வீடு மட்டுமல்ல அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் ஜி ஸ்கொயர் பாலாவுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் திமுக ஐடி பிரிவு துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்தது. இவ்வாறு திமுகவின் மறைமுக அதிகார மையமாக திகழும் சபரீசன் வீட்டில் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் திமுகவினரோ ஏதோ அப்பாவி வீட்டில் ரெய்டு நடந்தது போல பில்டப் கொடுப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.