இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்… கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படி தயாராகலாம்? எப்படி கட்சியை வளர்க்கலாம்? ஜெயிப்பதற்கு என்ன வழி? என்றெல்லாம் நாடு முழுக்க அரசியல் கட்சிகள் யோசித்துக்கொண்டிருந்தால், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணியின் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.. தன்னுடன் பயணிக்கும் கட்சியை எப்படி கழட்டிவிடலாம்? என்று மட்டுமே சதாசர்வ காலமும் எண்ணிக்கொண்டிருக்கிறது திமுக… இதற்கு பலியாகப் போவது எந்தெந்தக்கட்சிகள் என்பதுதான் உச்சபட்ச சஸ்பெண்ஸ் ஸே..

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. 2 நாட்களுக்கு முன்னர் சென்னை சத்ய மூர்த்தி பவனில் நடந்த அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதும், அதை அங்கிருந்தவர்களிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தியபிறகும் தான் இந்த விவகாரத்தையே வெளியில் பேச ஆரம்பித்திருக்கிறோம்…

ஆம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5 அல்லது 6 சீட் மட்டுமே கொடுத்து அமுக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தானே எல்லாத்தையும் லவட்டிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது திமுக… அப்படியானால் காங்கிரஸ் இதனை எதிர்த்திருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் நிலைமையோ வேறு… காங்கிரஸ் கட்சியும் இதனை ஆதரிக்கிறது.. காரணம் தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக எந்த டீல் கொடுத்தாலும்அதனை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், அது 5 சீட் ஆக இருந்தாலும் சரி என்று கூறியிருக்கிறார்.. இதனால்தான், தமிழக காங்கிரஸ்-ல் பெரும் அதிருப்தி உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே, திமுக தயவால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது என்ற பேச்சுக்கள் எல்லாம் வலம்வந்துகொண்டிருக்க, இப்போது கே.எஸ்.அழகிரி பேசியிருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போதே வேட்பாளர் தேர்வில் இருந்து பிரச்சாரம் வரை திமுகவே எல்லாத்தையும் TAKE CARE செய்துவிட்டது.. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே செந்தில்பாலாஜி களத்திற்கு வந்துவிட்டார் இனி எல்லாத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் பேசி இருந்தத. இதற்கு இன்னும் வலுசேர்க்கிறது.

ஆக, திமுக கொடுக்கப்போகும் வெறும் 5 அல்லது 6 சீட்டிற்காகத்தான் கூட்டணியில் இருக்கப்போகிறதா காங்கிரஸ்? அகில இந்திய அளவில் இருக்கும் INDIA கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தமிழகத்தில் இதனை ஏற்றுக்கொள்ளுமா? ராகுல் காந்தி தன் அதிருப்தியை வெளிப்படுத்துவாரா? ஒருவேளை காங்கிரஸ் உடனான கூட்டணி தேவையில்லை, எப்படி கழட்டிவிடலாம் என்று யோசித்து இந்த தொகுதி பங்கீடு யுக்தியை கையில் எடுத்திருக்கிறதா திமுக? இதையெல்லாம் உற்று கவனித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து கோஷ்டியினரும் கட்சித்தலைமைக்கு எதிராக மாறிவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Exit mobile version