வன்முறைச் செயல்களிலும், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களிலும் தி.மு.கவினர் மீது வழக்குகள் பதியப்படுவதும், கைது செய்யப்படுவதும் சமீப காலங்களில் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் அக்கட்சியினர் செய்திருக்கும் நிதி மோசடிகள் தற்போது அம்பலமாகி வருகின்றன. தி.முக. இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் அரங்கேற்றியுள்ள ஊழல் தற்போது அந்த மாவட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுக்கா காவடிப்படியில் இயங்கி வருகிறது, காவடி கூட்டுறவு கடன் சங்கம். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்டுள்ளார் கோட்டை கண்ணன். இவர் இந்த தலைவர் பதவிக்கு வந்ததே ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.வி முத்துராமலிங்கம் துணையுடன் தான் என்று கூறப்படுகிறது.
திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.வி முத்துராமலிங்கம், கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் கோட்டை கண்ணனையும், கூட்டுறவு வங்கியின் செயலர் மீனாட்சி சுந்தரத்தையும் கூட்டு சேர்ந்துக்கொண்டு, சதி செய்து பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் கூட்டுறவு சங்கத்தில் போலி அடங்கல், போலி கணினி பட்டா போன்றவற்றை தயார் செய்து கடந்த 2013 முதல் 2018 வரை பல்வேறு வகையான கூட்டுறவு கடன்கள் மூலம் சுமார் 5 கோடி ரூபாய் வரை கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், வெளியூரில் வசிக்கும் தன் நண்பர்கள் பெயரிலும், தன்னிடம் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் பெயரிலும் என்று பலரையும் பயன்படுத்தி மோசடிக் கடன் பெற்றுள்ள திமுக பொறுப்பாளர் முத்துராமலிங்கம், இறந்து போனவர்களையும் விட்டுவைக்கவில்லை என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர் ஊர்மக்கள். இறந்தவர்கள் பெயரிலும் கடன் வாங்கியிருக்கும் முத்துராமலிங்கத்தின் ஏமாற்றுத்தனம், ஒட்டுமொத்த திமுகவினரின் மோசடித்தனத்துக்கு சாட்சி என்றும் கமுதி பகுதியில் பேசப்படுகிறது.
எப்படி அரங்கேற்றினார்கள் இந்த மெகா கடன் மோசடியை..?
ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.வி.முத்துராமலிங்கம், கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் கோட்டை கண்ணன் ஆகியோர் கூட்டாக இணைந்து அவரவர் குடும்பத்தார் பெயரில் போலியாக அடங்கல் சான்றுகளை தயார் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் V.A.O கையெழுத்தையும் போலியாக போட்டு, அந்த அடங்கல் சான்றில் தனியார் கடையில் செய்யப்பட்ட போலி அரசு முத்திரையை பயன்படுத்தி மிக பெரிய மெகா மோசடி செய்ததாக கமுதி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மெகா மோசடி பற்றி கூட்டுறவு துறைக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. உடனே கூட்டுறவு விசாரணை குழு அதிகாரிகள் 18.9.2018 அன்று கிராம நிர்வாக அதிகாரி P.K நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தது. அதில் காவடிபட்டி கூட்டுறவு சங்கத்திற்கு விவசாய கடன் பெறவும், விவசாய நகைக்கடன் பெறவும் தான் யாருக்கும் பயிர் அடங்கல் சான்று வழங்கவில்லையென்றும், இந்த இடங்களில் உள்ள கையொப்பம் தன்னுடையது இல்லை என்றும், இந்த இடங்களில் பயன்படுத்தப்பட்ட அரசு சீல் தன்னுடையது இல்லை என்று கூறியுள்ளார் கிராம நிர்வாக அதிகாரி P.K நிர்மலா.
இந்த புகார் குறித்து நாம் கிராம நிர்வாக அதிகாரி P.K நிர்மலாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்…
இந்த தொலைபேசி அழைப்பிற்கு பின்பாக மீண்டும் இடைவெளி விட்டு இரண்டுமுறை தொடர்புகொண்டோம் இருப்பினும் அவர் நமக்கு பதிலளிக்கவில்லை.
திமுக பொறுப்பாளர் கே.வி.முத்துராமலிங்கம் கூட்டாக செய்த மோசடிகள் என்ன ?
போலியான நிலங்கள் இருப்பதாக கணக்கு காண்பித்து – ரூ1 கோடியே 18 லட்சம் அளவிற்கு பணம் கொள்ளை அடித்தது
போலியாக நகைக்கடன்கள் அளித்ததால் கூட்டுறவு சங்கத்திற்கு சுமார் ரூ.69 லட்சம் வரை நஷ்டம்
அரசின் வறட்சி நிவாரணத்திலிருந்தும் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் வரை சுருட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.வி முத்துராமலிங்கத்தின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த திமுகவும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.
விவசாய கடன்களை தில்லுமுல்லு செய்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.வி.முத்துராமலிங்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்கின்றனர் கமுதி பகுதி வாசிகள்.
ஏற்கனவே தில்லுமுல்லு திமுக என்று எடுத்த பெயரை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல், பல மோசடி ஆசாமிகளை திமுக தொடர்ந்து வளர்த்து வருகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்…