மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டைட்டாகர் (TITAGARH) நகராட்சி கவுன்சிலரும், பாஜக பிரமுகருமான மணீஷ் சுக்லா, நேற்று காவல்நிலையம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று அம்மாநில பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இன்று காலை 10 மணிக்கு நேரில் விளக்கமளிக்கப்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார். இதனை, தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.