நச்சுவிதைகளை அதிமுகவில் இருந்து அகற்றியுள்ளோம் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் இருந்து நச்சு விதைகளை அகற்றி உள்ளோம் என்றும் உலகத்திலேயே கீழ்மட்ட அரசியல்வாதி யார் என்றால் டி.டி.வி.தினகரன்தான் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது என்றும், யாராலும் இந்த இயக்கத்தை உடைக்க முடியவில்லை என்றும் கூறினார். ஜெயலலிதா கூறியதைப்போல், இந்த இயக்கம், இன்னும் நூறு ஆண்டுகள் வாழும் என்றார்.

Exit mobile version