250 நாட்களுக்கு இன்று மாலையுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்!

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை கரூர் உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவருகிறது. ஆண்டு தோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்தாண்டு அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால் முன்கூட்டியே மே 24 ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. தற்போது முப்போக சாகுபடி நிறைவடைந்த காரணத்தால் 250 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாகவும், நீர் இருப்பு 69.94 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருப்பதால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version