கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கே.ஆர்.பி. அணை விளங்குகிறது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 42 அடிவரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது. வறட்சி காரணமாக அணையின் நீர் அளவு 18 அடிக்கும் கீழ் சென்றதால், முதல் போக சாகுபடி செய்வது கேள்விக்குறி ஆனது. இந்நிலையில், தென் பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர் இருப்பு 38 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.