கிருஷ்ணகிரியில் 1000 ஆண்டு பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாற்றங்கரையின் ஓரம் முத்தாகவுண்டனூர் கிராமத்தில், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள இடிந்த சிவன் கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பற்றி, மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் “ இந்த இடத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர்கள் காலத்திய வட்டெழுத்து நடுகற்கள் இரண்டு கிடைத்து உள்ளன. மேலும் இங்கு கிடைத்த மஹிஷாசுரமர்த்தினி சிலையின் அமைப்பை ஆராய்ந்தபோது, 1000 ஆண்டுகள் பழமையானவை என தெரிகிறது” என்று கூறினார்.

மகிஷாசுரமர்த்தினி எனும் அவதாரம் பார்வதி தேவி எடுத்தது ஆகும். மகிசாசுரன் எனும் அரக்கன் தன்னை அழிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் என்கிற வரத்தை சிவபெருமானிடம் பெற்றவன். அவன் செய்யும் இன்னல்களிலிருந்து மக்களைக் காக்க பார்வதி தேவி அவதாரம் எடுத்து அழித்தொழிப்பார். அதன் காரணமாகவே மகிசாசுரமர்த்தினி அவதாரம் பெரிதாக பேசப்பட்டது.

Exit mobile version