தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் 24 மணி நேரமும் கணினி மூலம் இயங்கும் மின்தடை குறைதீர்க்கும் மையத்தினை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் திறந்து வைத்தார். மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் மூலம் பொதுமக்களின் மின் தடை குறித்த புகார்கள் பெறப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மின்துறை ஊழியர்கள் மூலம் விரைவாக சரி செய்யும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின் துறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.