வாக்குச்சாவடியில் நடக்கும் களேபரங்கள்..என்ன நடக்கிறது ஈரோடு கிழக்கில்?

ஒரு நாட்டில் தேர்தல் நடைபெறுவது என்பது அந்நாட்டிற்கான ஜனநாயகத் திருவிழா ஆகும். ஒரு நாட்டையும், மக்களையும் ஆள்வதற்கான ஆளுமையை தேர்ந்தெடுக்கும் ஒரு பொதுப்படையான ஜனநாயக நிகழ்ச்சிதான் தேர்தலாகும். முதல் தலைமுறை வாக்களர்களிலிருந்து மூப்பு எய்திய வயதானவர்கள் வரை தங்களின் அன்றாடப் பணியினை விடுத்து ஒரு சில மணி நேரங்களை தங்களது வாக்கிற்காக செலவழிக்கிறார்கள். அத்தகைய வாக்காளர்களை அவர்களின் போக்கில் விட்டுவிட வேண்டும். மாறாக அவர்களிடம் சென்று அத்துமீறலில் ஈடுபடுவதோ, அவர்களின் சுய எண்ணங்களை மாற்றுவதோ போன்றவற்றில் எந்தக்கட்சியினரும் ஈடுபடக்கூடாது. ஒருவர் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தானே முடிவு செய்யவேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சி மற்றும் ஜனநாயகம் ஆகும்.

ஆனால் இன்றைய ஆளும் தரப்பு ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றி வைத்திருக்கிறது. வாக்களர்கள் தங்கள் சுயபுத்தியிலிருந்து இயங்கவேண்டும் என்று நினைத்தால்கூட இந்தப் பண விவகாரம் அவர்களின் எண்ணங்களை திசைமாற்றும். ஒருகாலத்தில் பணம் மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் தற்போது கோழி பிரியாணி, வெள்ளிக்கொலுசு, குக்கர், குங்கும சிமிழ் போன்றவற்றைத் தருகிறார்கள். அதைவிட கொடுமை, இந்த ஆளும் தரப்பு ஆடுகளை பட்டியில் அடைத்து வைப்பதுபோல ஆட்களைப் பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். இது எந்த மாதிரியான அரசியல் என்று யாருக்கும் விளங்கவில்லை. ஆம் இந்த விளங்காதவர்களின் அரசியல் என்றைக்கும் விளங்காது. இந்தப் பண விவகாரம் தற்போது வாக்குச்சாவடி வரை வந்துவிட்டது. வாக்குச்சாவடியா இல்லை தனது வாக்கைச் சாவடிக்கும் கூடமா என்று தெரியவில்லை. ஒரு சின்னத்திற்கு வாக்களித்தால் வேறொரு சின்னத்திற்கு வாக்களித்ததாக காட்டுகிறது என்பதெல்லாம் பொய் என்ற காலம் சென்று அது மெய்தான் என்று சில சம்பவங்கள் நிரூபணம் செய்கிறது.

வாக்குசாவடியில் ஆளும் தரப்பினர் தங்களுடைய அதிகார ஆளுமையினைத் தொடர்ந்து காட்டி வாக்காளர்களை மிரட்டி வருகிறார்கள். ஒரு பெண்மணி தெரிவித்த தகவலின்படி, “வாக்குச்சாவடிக்கு எங்களை ஆளும் கட்சியினர் கூட்டி சென்று வாக்களிக்கச் சொல்கிறார்கள். எங்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியாத என்ன?” என்று தன்னுடைய ஆதங்கத்தினைத் தெரிவித்தார். மேலும் வாக்குச்சாவடி முன்பாக ஆளுங்கட்சி தலைவரின் புகைப்படத்தை வைப்பது போன்ற அரஜாகத்தில் ஈடுபடுகிறார்கள். ஆளும் தரப்பு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவருகிறார்கள். இந்தத் தமிழ்நாடு குரங்கு கையில் சிக்கியப் பூமாலையாக சிதறும் காலம் வருவதற்குள் மக்கள் தங்கள் தீர்ப்பை மாற்றி அமைப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதற்கு தற்போது நடைபெறும் ஈரோடு கிழக்குத் தேர்தல் ஆளும் தரப்பிற்கு தக்கப் பாடமாக அமையும்.

Exit mobile version