சாலை வசதி இல்லாத போதமலை மலைக்கிராமங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த போதமலையில் உள்ள மேலூர், கீழூர், மற்றும் கெடமலை ஆகிய 3 குக்கிராமங்களில் ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 8 பேர் கொண்ட அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மலைக்கிராமங்களுக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து எடுத்துச் சென்றனர்.