உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட்டுக்குள் தயாராகிவிடும்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் தயாராகிவிடும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் பெற்று, வாக்காளர்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மொத்தம் 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்களை, 1 லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பிரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இப்பணிகள் முடிவுற்று, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாராகி விடும் என்றும், வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version