உள்ளாட்சி அமைப்புகளில் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஓரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் என மொத்தம் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

Exit mobile version