தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன
- தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள், 75 மையங்களில் வைத்து ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணப்படுகிறது.
- அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள், போலீசார் என சுமார் 1 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குகள், அண்ணா பல்கலைக்கழகம், லயோலோ மற்றும் ராணிமேரி ஆகிய கல்லூரிகளில் உள்ள மையங்களில் எண்ணப்படுகிறது.
- ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரியில் நடைபெறுகிறது.
- பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ளது.
- ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையில் கலந்துக்கொள்ளவிருக்கும் வேட்பளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும், கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.