திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்திற்கு வேட்பாளரே வராதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமாரை ஆதரித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசினார். அக்கூட்டத்திற்கு யாரும் வராத காரணத்தால் இருக்கைகள் காலியாக இருந்தன. மேலும் கி.வீரமணி எப்போது பேசி முடிப்பார் என்பது போல மேடையில் இருந்தவர்களே கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்தனர். திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்திற்கு வேட்பாளரே வராதது கி.வீரமணியை திமுக புறக்கணிக்கிறதா என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது.