தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. இந்தநிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் 242 வாக்குச் சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version