கிரீஸ் நாட்டின் எவியா தீவில் உள்ள பைன் மரக் காடுகளில் பற்றி எரியும் தீயைக் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அந்நாட்டு வீரர்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எவியா தீவில் செவ்வாய் அன்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது, காற்றின் வேகத்தால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி, பல நூறு பைன் மரங்களை, சாம்பலாக்கியது. இரவு முழுவதும் போராடிய தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், ரசாயனப் பொடி தூவியும், நீரை ஊற்றியும் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்தை ஒட்டிய கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு, வெளியேற்றப்பட்டுள்ளனர். வெப்பம் அதிகரிப்பதால், கிரீஸில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்களின் செயலுக்கு எவியா மேயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.