கிரீஸ் நாட்டில் மிட்சொடாகிஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது

கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிகோஸ் மிட்சொடாகிஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது.

கிரீஸில் 300 உறுப்பினர்களை கொண்ட நடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில், கிரிகோஸ் மிட்சொடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயாக கட்சியினர் 39.8 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி 158 இடங்களை வென்றது. இதனையடுத்து, புதிய அமைச்சரவை குழுவினர் தலைநகர் ஏதென்சில் பதவியேற்றுக் கொண்டனர். ஏதென்ஸ் பேராயர், 2 ஆம் லிரோனிமஸ் முன்னிலையில் புதிய பிரதமர் முதலில் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் அரசு அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கொண்ட கலவையாக புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version