சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்,நிலவின் அருகில் 104 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 20ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. அதன்பின் சந்திரயான் 2 விண்கலத்தின் உயரம் 5 முறை மாற்றியமைக்கப்பட்டு, நிலவிற்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
வரும் 7ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டர் படிப்படியாக நிலவின் அருகே சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி நிலவில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உள்ளது. நாளை 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு அருகில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.