அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரசாரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் பிரசாரத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Exit mobile version