தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர்கள் ஆதரவு திரட்டினர். இந்த சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதேபோல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமாரை, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். 

Exit mobile version