விஜயகாந்த் பிறந்தநாள் விழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் விழாவானது, சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

தமாக தலைவர் ஜிகேவாசன், இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த், நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார்- தேவி ஆகிய மணமக்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்த விஜகாந்த், அவர்களின் வாழ்த்தைப் பெற்றுக்கொண்டார். பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Exit mobile version