விஜய்காக கிரேனில் மாலையைத் தூக்கி வந்த ரசிகர்கள்..

“பிகில்” படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் தளபதி 64-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். மேலும் சாந்தனு, தொகுப்பாளினி ரம்யா, 96 கௌரி ஆகிய திரைப்பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

டெல்லியில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடந்த வந்த நிலையில்,தற்போது கர்நாடகாவில் ஷிமோகா என்ற இடத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. படப்பிடிப்பிற்காக கர்நாடகா ஹோட்டலில் நடிகர் விஜய் தங்கியிருக்கிறார்.

தமிழகத்தில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது போல கேரளா கர்நாடகாவிலும் ரசிகர்கள் கூட்டம்  அதிகம்.அதனால் தினமும் விஜய்யை காண ஹோட்டலுக்கு  ரசிகர்கள்  வருகை தருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்காக ஒரு பெரிய மாலையை தயார் செய்து ரசிகர்கள் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். மாலை பெரிதாக இருப்பதால், கிரேன் மூலம் எடுத்து சென்றுள்ளனர். இதனை பார்த்து வியந்து போன விஜய் ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

Exit mobile version