தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது.  இந்நிலையில் தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என  படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

Exit mobile version