இந்த தீபாவளியின் வசூல் ராஜா பிகில் தான் -எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா ?

அட்லி இயக்கத்தில் விஜய், நயன் தாரா, யோகி பாபு, விவேக் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பிகில் திரைப்படம் அக்டோபர் 25 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் அப்பா விஜய் , மகன் விஜய் என இரண்டு கதாபாத்திரம்.தான் சாதிக்க முடியாததை foot ball team -ன் coach ஆக மாறி சாதிக்கிறார் மகன் விஜய்.விளையாட்டை சார்ந்த திரைப்படம் என்பதால் இது football lovers-க்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.மேலும் படம் வெளியாகி சில நாட்களிலே 270 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.அதே போல் எஜிப்த் நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பிகில் பெற்றுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள ஜார்டன் நாட்டில் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதி பிகில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.பிகில் திரைப்படம் தான் ஜார்டனில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது..

Exit mobile version