எங்கே ? எப்போ? பிகில் audio launch..தெறிக்கவிடும் அப்டேட்ஸ்

பிகில் திரைப்படமானது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400 திரையரங்குகளில் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் பிகில்..இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, விவேக் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர்.இப்படத்தினை ஏ.ஜி.எஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிகில் திரைப்படத்திலிருந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.செப்டம்பர் மாதம் முதலே அடுதடுத்து பிகில் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் பிகில் படத்தின் audio launch செப்டம்பர் 19ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400 திரையரங்குகளில் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது எனவும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல் audio launch-ன் போது உலக தரம் வாயந்த கலைஞர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பாடல்களை பாடி அசத்த உள்ளார் என்ற தகவலும் வெளியாகிவுள்ளது.

Exit mobile version