இனி தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..ஏன் தெரியுமா ?

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 64 படத்தின் அப்டேட் குறித்து படக்குழுவினர் அடுத்த மூன்று நாட்களுக்கு வெளியிட உள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.பிகில் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தளபதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.

தளபதி 64 படத்தை மாநகரம், கைதிஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.XB Film creators இப்படத்தை தயாரிக்கின்றனர்.படம் குறித்து வேறு எந்த அப்டேட்களும் வெளியாகாத நிலையில், இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தளபதி 64 படத்தின் அப்டேட்கள் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version