நெல்லை அருகே கூட்டுறவு சங்க துணைத்தலைவர் வெட்டி படுகொலை

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க துணை தலைவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திமுக பிரமுகரின் தம்பியும், கூட்டுறவு சங்க தலைவருமான விஜயபாண்டியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடையநல்லூரை அடுத்த தலைவன் கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், திமுக பிரமுகரின் தம்பியுமான விஜயபாண்டியன் என்பவர் பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக கூறி, கடன் கொடுக்காமல் அந்த பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கூட்டுறவு சங்க துணை தலைவர் திரு நீலப்பாண்டியன், நெல்லையில் உள்ள தலைமை கூட்டுறவு சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரிக்கையில் விஜயபாண்டியன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கூட்டுறவு சங்க துணை தலைவர் திரு நீலப்பாண்டியனை, விஜயபாண்டியன் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கூட்டுறவு சங்க துணை தலைவர் திரு நீலப்பாண்டியன் தலைவன்கோட்டை அதிமுக கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய கூட்டுறவு சங்க தலைவர் விஜயபாண்டியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version