துரைமுருகன் தரம்குறித்து வேலூர் மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்:பிரேமலதா

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பாதாளத்திலிருந்து தோண்ட தோண்ட வந்த பணத்தை கணக்கிட முடியவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் புதிய நீதி கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி ஆகியோரை ஆதரித்து குடியாத்தத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், துரைமுருகனின் தரம் குறித்து வேலூர் மக்களுக்கு தற்போது தெரிந்திருக்கும் என்று கூறினார்.

துரைமுருகன் வீட்டிலிருந்து பாதாளத்திலிருந்து தோண்ட தோண்ட வருவது போல எடுக்கப்பட்ட பணத்தை கணக்கிட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஜயகாந்த்தை விமர்சித்ததால் தான் அவருக்கு இந்த நிலையை கடவுள் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version