கஜா புயல் பாதிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி

கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இதுவரை சுமார் 33 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா பேரவை சார்பில் பேரவை செயலாளர் ஆர்.பி.உதயக்குமார், பொறுப்பாளர்கள் கடம்பூர் ராஜு , சேவூர் ராமசந்திரன் மற்றும் பேரவை நிர்வாகிகள் 50 லட்சம் நிதியுதவிக்கான காசோலை முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினர்.மதுரை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

மார்ட்டின் உதவி அறக்கட்டளை சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கினர்.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சார்பில் முதலமைச்சரிடம் 6 கோடியே 79 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் முதலமைச்சரை சந்தித்து தனது 5 மாத ஓய்வூதிய தொகையான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சன்.டி.வி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் 2 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.

நாகா நிறுவனத்தின் சார்பில் அதன் செயல் இயக்குனர் சவுந்தர் கண்ணன் முதலமைச்சரிடம் நிவராண பணிக்காக 11 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

 

Exit mobile version