திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பாரதிராஜா அலுவகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக தங்கள் கட்சியை உடைக்க நினைக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து வைகோ மீது அப்போது ஆட்சியில் இருந்த திமுக சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றம் வந்த வைகோவிடம், உங்கள் மீது வழக்கு தொடர்ந்த திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆத்திரமடைந்த வைகோ உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்புவதாக செய்தியாளர்களை குற்றம் சாட்டினர்.