கொரோனா பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியது

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

சீனாவில் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 115 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனம் நேற்று தொடங்கியது. வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரில் முதல் முறையாக 43வயதான ஜெனிஃபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

ஜெனிஃபரை தொடர்ந்து 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Exit mobile version