குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?

புதுச்சேரியில் மேலும் 9 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியால் அனுமதிக்கப்கட்ட நிலையில் அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை தொடங்கும்பட்சத்தில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குழந்தைகள் பாதிப்பு அந்த அச்சத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. 

முன்னதாக இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் மூன்றாம் அலை தாக்குதலை எதிர்பார்க்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் உட்பட நிபுணர்கள் பலரும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

எதுவாகினும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே இப்போதைய சூழலில் ஒரே வேண்டுகோள். 

Exit mobile version