கொரோனா பற்றித் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!

கொரோனா தோற்றம் பற்றி தங்களுக்கு தெரிந்த விவரங்களை, அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திய கோரோனா நோயால் உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனிடையே, சீனாவின் வூகான் நகர ஆய்வகத்தில்தான் இந்த வைரஸ் தோற்றுவிக்கப்பட்டதாக பல்வேறு நாடுகள் சந்தேகம் எழுப்பின. இந்த குற்றச்சாட்டுக்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தற்போது வரை இதுகுறித்து போதிய தகவல் கிடைக்காததால், கொரோனா தோற்றம் பற்றி தங்களுக்கு தெரிந்த விவரங்களை, அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

 

Exit mobile version