ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா உயிரிழந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை கொண்டு நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் ஹம்சாவும் அல்கொய்தா அமைப்பில் செயல்பட்டு வந்தார். அவரது இருப்பிடம் குறித்து தகவல் அளிப்போருக்கு 10 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்து இருந்தது. 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஹம்சா உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பின், மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் தற்போது அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.