விவாகரத்தா?.. அப்போ லீவ் எடுத்துக்கோங்க ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!

இரு மனங்களை இணைப்பது திருமணம் என்றால் அப்படி இணைந்த மனங்களை பிரிப்பது விவாகரத்து.. விவாகரத்து செய்ய தயாரான நபர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏராளமான சலுகைகளை வாரிவழங்குகிறது சில வெளிநாட்டு நிறுவனங்கள்… அந்த சலுகைகள் என்ன?..பார்க்கலாம்.

பொதுவாக இந்திய கலாச்சாரத்தின் படி ஒருமுறை நிகழ்த்தப்பட்ட திருமணம் ஏழு ஜென்மத்திற்கு நீடிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் திருமணம் என்ற ஒரு பந்தத்தை ஏதோ ஒப்பந்தத்தை ரத்து செய்வது போல விவாகரத்து என்ற பெயரில் முறித்துக்கொள்கிறார்கள். அரசும் இதற்கு இடம் கொடுக்கிறது. சட்டமும் இதற்கு அனுமதி அளிக்கிறது.

ஏதேதோ காரணத்தால் விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மனரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்ளவும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளன.அதன்படி, விவாகரத்து நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, தேவையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றிக் கொள்வது என பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

மேலும், சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளன. அதன்பின் தங்களது பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கு கின்றன.தற்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் விவாகரத்துக்கான விடுப்பை வழங்கத் தொடங்கியுள்ளன.

நிறுவனங்களின் இந்த முடிவு விவாகரத்தால் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் ஊழியர்களுக்கு ஓரளவு அதிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Exit mobile version