மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி, தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிட்டியுள்ளது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பாப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேபோன்று ஒடிசா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.