இலங்கையின் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், வதந்திகள் காரணமாக நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் உட்பட பல இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நீர்கொழும்புவில் மட்டும்110ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற மூன்று வாரங்கள் கடந்த நிலையில், வதந்திகள் காரணமாக சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். இரவு வேளையில் அடையாள தெரியாத நபர்கள் நகருக்குள் புகுவதாக கூறப்படுவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரின் சொத்துக்கள் மீது மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களின் இல்லங்களை பூட்டிவிட்டு பாதுகாப்பான பகுதிகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.