உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

2-வது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக உடல்நலத்தை பேணி பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் வந்த அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஹர்ஷ் வர்தன், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version