இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும்: UBS நிறுவனம்

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த UBS நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக பொருளதார மந்த நிலை, கொரோனா பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது என்று UBS நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், நிச்சயமற்ற தன்மையும், அச்சமும் நுகர்வோர் நம்பிக்கையை குறைத்து, உள்நாட்டு தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தாக்குதல் தவிர, உள்நாட்டு கடன் வளர்ச்சி, அடுத்த 2 ஆண்டு காலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அடுத்த நிதியாண்டில் பொருளதார வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version