அடுத்தடுத்த இரு வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகில் உள்ள கலிக்கம்பட்டியில், வங்கி அதிகாரி பாஸ்கரன் மற்றும் அவரது பக்கத்தில் வீட்டில், ஆள் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டினுள் புகுந்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை போன வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். இதில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version