இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் கடற்கரை நகரான சிலாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு பிரிவினருடைய வழிபாட்டு தலங்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.