அமெரிக்காவின் எதிர்ப்புகளை மீறி துருக்கி ஏவுகணை ஒப்பந்தம்

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளை மீறி ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவணை துருக்கி கொள்முதல் செய்துள்ளது.

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் துருக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதிவரை அமெரிக்கா கெடு விதித்திருந்தது.

ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் பொருளாதார தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ரஷியாவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களில் முதல் கவனை வெள்ளியன்று துருக்கி கொள்முதல் செய்தது.

Exit mobile version