ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு

கொரோனா பரவலை தடுக்க, ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியர்களாக இருந்தாலும், அந்நாடுகளில் இருந்து இந்தியா வர வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version